Wednesday, May 13, 2020

ஆர்கானிக் உணவு, இயற்கை உணவு குடல் வாழ் நுண்ணுயிரிகள்


குடல்வாழ் நுண்ணுயிரிகள் பற்றிய சிறு அறிமுகத்தை கடந்த பகுதியில் கண்டோம். குடல்வாழ் நுண்ணுயிரி சமூகங்கள் மனிதன் உருவான காலம் முதல் நம்முடன் வாழ்ந்து வருகின்றன. அவற்றிற்கு இன்றியமையாதவை என்பது நாம் உண்ணும் உணவு. நம் உணவின் மூலமே அவைகள் வளர்க்கின்றன; சில அழிக்கப்படுகிறது. அதன் நிலைதல் பாதிக்கப்படுகிறது. நாம் சுற்றுப்புறம் அவற்றின் எண்ணிக்கை மற்றும் வளர்ச்சியில் பெரும் பங்கு வகிக்கிறது. இன்றைய ஆங்கில ஆராய்ச்சியில் பல நோய்கள் auto  immune disorder  எனும் வகையை சார்ந்தது என்று கூறப்படுகிறது. என்னவெனில், நாம் உண்ணும் உணவில் உள்ள உணவுவேதிபொருட்களை நம் உடலின் நோய் எதிர்ப்பு மண்டலம், உணவு என்பதை புரிந்து கொள்ள முடியாமல் எதிர்த்து போராடி அழிக்கும் வேலையை செய்கிறது. 




அல்லது நம் உடல் நோய் எதிர்ப்பு மண்டலம் நம் உடலுக்கு எதிராக வேளை செய்ய ஆரம்பிக்கிறது. இவற்றிக்கான காரணம் என்ன என்பதை ஆராய்ந்து பார்க்கையில் நம் உடலுக்கு பழக்கமில்லாத உணவு வேதிப்பொருட்கள் (அந்நிய உணவுகள்) உள்ள நுழையும்போது அவற்றை ஜீரணமாக்கும் நுண்ணுயிர்கள், நம் உடலில் இருப்பதில்லை. சில சமயங்களில் இவற்றில் உள்ள மூலக்கூறுகள் நேரடியாகவும் ரத்ததில் கலக்கிறது. இத்தகைய மூலக்கூறுகளை நோய் எதிர்ப்பு மண்டலம் உணவு பாரம்பரியமாக வரும் உணவு அல்லாததால், இவை தேவையற்ற கழிவுகள் என்ற கணக்கில் எடுத்து இவற்றை அகற்றுகின்றன. இதனால் நம் உடலுக்கு தேவையானது கிடைக்காததுடன், நம் நோய் எதிர்ப்பு மண்டலமும் பலகீனமாகிறது. நம் உடலையும் அழிக்கும் விதத்தில் செயல்பட்டு நம் உடலுக்கும் கேடு உண்டாக்குகிறது. 

   ஆட்டோ இம்மூன்  கோளாறு நோய்கள்
   உதாரணமாக, சீமை மாட்டு பால் அ1 பால். இந்த அ1 பாலில் உள்ள ஒரு புரதம் நம் உடலில் சுரக்கும் இன்சுலின் போன்ற அமைப்பில் இருப்பதால், நம் நவீன எதிர்ப்பு மண்டலம் இவற்றை அழிக்க antibodies களை  உற்பதி செய்கிறது. இந்த antibodies  நம் உடலில், சுரக்கும் இயற்க்கை இன்சுலினையும் சேர்த்து தவறுதலாக அழித்து நமக்கு சர்க்கரை கோளாரை உண்டுபண்ணுகிறது. இது போல இன்று நாம் அந்நிய கலாச்சாரத்தின் தாக்கம் மற்றும் உலகளாவிய போக்குவறது காரணமாக ஏறப்பட்டுள்ள உணவு நகர்வு காரணமாக, நாம் நம் சூழ்நிலைக்கும், நம் பாரம்பரியதிர்க்கும் பழக்கமில்லாத உணவுகளை உண்ணவேண்டிய கட்டாயதிற்கு தள்ளப்பட்டுள்ளோம். இவ்வகையில், நுரையீரல் செயழிலப்பு, மூட்டு வலி, போன்று 80 வகையான auto  immune  கோளாறுகள் ஏற்படுவதாக இன்றைய ஆராய்ச்சிகள் தெரியப்படுத்துகிறது.
அதோடு, நாம் எடுக்கும் அந்நிய உணவுகளை முறையாக ஜீரணிக்க தேவையான குடல்வாழ் நுண்ணுயிரிகள் நம் உடலில் இல்லை என்பதும் ஒரு காரணம் என்று  அறியப்படுகிறது. Auto  immune  கோளாறுகளை ஏற்படுத்த வலுவான காரணியாக மாறிவிடுகிறது. எனவே, பாரம்பரியம் அல்லாத உணவுகளை தவிர்க்க வேண்டியுள்ளது. 

   எது இயற்கை உணவு?
அப்படி அவற்றை உட்கொள்ள முயலும் போது எது பாரம்பரியமானது என்பதை அறிந்துகொள்ள வேண்டும். இன்று ஆர்கானிக் உணவுகள், இயற்கை உணவுகள் என்ற பெயரில் பல உணவுகள், உலா வருகின்றன. இவற்றில் பல நம் இந்தியா தேசத்திற்கு அப்பால் இருந்து வந்தவையாக இருக்கிறது (Foreign Origin - உதாரணம் – இங்கலீஷ் காய்கறிகள், பழங்கள்) மற்றும் சில நம் இந்தியாவிர்க்குள்ளேயே பிரதேச  மாறுபாடு, சூழல் காரணமாக பாரம்பரியமாற்றதாக திகழ்கிறது (உதாரணம் – நாட்டு மாட்டு பால் , அரிசி, பருப்பு வகைகள் போன்றவை).  இந்தியாவிர்க்குள்ளேயே, பலவகை அரிசி, பருப்பு ரகங்கள், நாட்டு மாடுகள் இருக்கின்றன. உள்ளூரில் வாழும் தாவரங்கள் மற்றும் அதன் உணவுகளையே உட்கொள்ள வேண்டும். அதுவே, native  அல்லது பாரம்பரியம் என்று கொள்ள முடியும். 

 
   உள்ளூர் உணவுகள்:
உள்ளூர் காய்கறிகளுக்கு, தானிய உணவுகளுக்கு மட்டுமே நம் குடல்வாழ் நுண்ணுயிரிகள் பழக்கப்பட்டிருக்கும். உள்ளூர் மண்ணில் வாழும் நுண்ணுயிரிகள் குடலில் பிறந்தது முதல் நம்முடன் வளருபவை. பிறந்த மண்ணில் நம்முடலில் குடியேறும் குடல்வாழ் நுண்ணுயிரிகள் இவை. நம் உடலின் சீரான வளர்ச்சிக்கும், இயக்கத்திற்கும் அதிமுக்கியம் என்று கடந்த 10 ஆண்டுகளில் கண்டறியப்பட்டுள்ளது. ஆகாயம்-காற்று-நெருப்பு-நீர்-பூமி இப்படி ஒன்றிலிருந்து அடுத்தடுத்து உருவானது. பிறந்த பூமியிலிருந்து உடலிலுள்ள 5 கோசத்திற்கு    7 தாதுக்கள் கிடைக்கிறது. பிறப்பு பந்தம், வேறு இடத்தில் இவை கிடைக்காது என்று ஆயுர்வேதம் கூறுகிறது. ஆகவே, இது குடல்வாழ் நுண்ணுயிரிகளுக்கு பொருந்தி வருவதாக உள்ளது. ஆகவே, இவற்றை வளர்க்கும் பாரம்பரிய உள்ளூர் (30- 40 km ) பகுதியில் உள்ள உணவுபோருட்களே அப்பகுதியில் பிறந்தவர்களுக்கு, ஆரோக்கியமானது என்பதை கருத்தில்கொண்டு உள்ளூர் உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும்.
இதுபற்றிய மிக்கவிரிவான விளக்கங்களை வரும் தொடர் கட்டுரைகளில் காணலாம்.

Tuesday, May 12, 2020

குடல்வாழ் நுண்ணுயிரிகள் பற்றிய முன்னோட்டம்

வெகு காலமாக நுண்ணுயிர்களை நுண்ணோக்கியின் மூலமும், ஒவ்வொரு வகையையும் தனித்தனியாக ஊட்டத்தட்டுகளில் வளர்ப்பதின் மூலமுமே ஆயவும் அறியவும் முடிந்தது. 


   நுண்ணுயிர் சமூகங்கள்
ஆனால், சமீபத்தியத் தொழில் நுட்ப முன்னேற்றங்களால், நம் குடலினுள்ளே குடி கொண்டுள்ள நுண்ணுயிர்களின் மரபணுக்களையும், அவற்றின் வடிவமைப்புகளையும், செயல் வேறுபாடுகளையும் எளிதாக அறிய முடிந்துள்ளது. இதன் மூலம் ஒரு குறிப்பிட்ட சுற்றுச்சுழலில் சேர்ந்து வசிக்கும் நுண்ணுயிர்களையும் (மைக்ரோபயோட்டா) அவைகளின் மரபணு அமைப்புகளையும் (மைக்ரோபயோம்) ஆய்வது சுலபமாகியுள்ளது. இவை தனித்து வாழ்வதில்லை. நுண்ணுயிர் சமூகங்கள், மனித சமூகத்தைப் போலவே மிகவும் சிக்கலான உறவோடு ஊடாடும் சமூகக் கூட்டங்களாகவே அனைத்து உயிர்களிலும் இயங்குகின்றன.

   நுண்ணுயிர் சமூகங்கள் கண்டுபிடிப்பு
மனிதர்களும் இதற்கு விதிவிலக்கல்ல. மனித உடலில் 9 பாகம் நுண்ணுயிர் உயிரணுக்களும், மனித உயிரணுக்கள் ஒரு பாகமாகவும் உள்ளது என்று 1970 லிருந்து 2014 வரை சொல்லிக் கொண்டிருந்தார்கள்

ஆனால் 2016 வருடம் நுண்ணுயிர்களின் உயிரணுக்கள் 40 ட்ரில்லியன் மனித உயிரணுக்கள், 30 ட்ரில்லியன் என்று இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்த வெய்ஸ்மேன் கல்வி நிறுவனம் கணித்துள்ளது. அதாவது 10:1 என்ற விகிதம் தவறு, 1.3:1 என்ற விகிதமே சரி என்று கூறுகிறது இந்த ஆய்வு.



   குடல்வாழ் நுண்ணுயிரி சமூகத்தின் வேலைகள்
பில்லியன் வருடங்களுக்கு மேல் உள்ள நெருங்கிய தொடர்பினால் நம் குடலில் உள்ள நுண்ணுயிர்கள் நோய்களைத் தடுக்கும் உபகரணங்களை வளப்படுத்துவதிலும், புதிய முறைகளைக் கற்பிப்பதிலும் முக்கிய பங்கேற்கின்றன. அது மட்டுமல்லாமல்,
·        நோய்க்கிருமிகளை அண்ட விடாமல் தடுத்தல்,
·       குடலின் நாளமில்லாச் சுரப்பி வேலைகள்,
·        நரம்புகளிருந்து செல்லும் சமிக்கைகள்,
·        எலும்பின் வலு,
· நம் உடல் சக்தித் தேவையில் பத்து சதவிகிதம், வைட்டமின் மற்றும்  
· நரம்புகளிருந்து செயதிகளை எடுத்துச்செல்லும் பொருட்களின் உற்பத்தி,
·        பித்த உப்பை சிதைத்தல்,
·        உண்ணும் மருந்துகளை மாற்றுதல்,
·     வெளியிலிருந்து வரும் நச்சுகளை முறியடித்தல் போன்ற பல முக்கிய காரியங்களில் பெரும் பங்கு கொள்கின்றன.

பொதுவாக நுண்ணுயிரிகள்  
பெரும்பாலான நுண்ணுயிரிகள் துர்நோக்கம் கொண்டவை அல்ல; நடுநிலை வகிப்பனவும், மனித குலத்துக்கு நன்மை செய்வனவுமே அதிக அளவில் உள்ளன. உலகிலேயே மிகக்கொடிய தொற்றுநோய் பரப்பும் நுண்ணுயிரியான வால்பாச்சியா (walbachia) என்கிற பாக்டீரியம், மனிதர்களையோ, முதுகெலும்புள்ள பிராணிகள் எதனையுமோ, தாக்குவதில்லை. ஆனால் shrimp, புழு, fruitfly வகையறாக்களைப் படாதபாடு படுத்தி விடும். நுண்ணுயிரிகளில் சுமார் ஆயிரத்தில் ஒன்று என்கிற விகிதத்தில்தான் மனிதர்களின் எதிரிகள் (pathogen) இருக்கும் என்று National Geographic பத்திரிக்கை கூறுகிறது. இந்தக் கொஞ்சமே உங்களுக்குத் தரும் உபாதைகளை நினைத்தால் இதுவே போதும் சொல்லிவிடுவீர்கள். நுண்ணுயிரிகள்தான் உலகின் மூன்றாவது கொலைக்காரணிகளாக பவனி வருவதால், ஆளைக்கொல்லாத சாது வகைகளைக் கூட மனிதர்கள் நம்புவதில்லை..
1952-ல், பென்சிலின் மட்டுமே எல்லாவகையான staphylococcus பாக்டீரியாக்களை அழிக்கப் போதுமானது என்ற கருத்து நிலவியது. 1960-களில் அமெரிக்க சர்ஜன் ஜெனரலான வில்லியம் ஸ்டெவார்ட், “அமெரிக்காவில் எல்லாவித நோய்த்தொற்றுகளும் முறியடிக்கப்பட்டுவிட்டன. மருத்துவநூல்களில் தொற்று நோய்கள்என்ற பகுதியையே நீக்கிவிடலாம்என்று மார்தட்டினார். அதே காலகட்டத்தில், 90% பாக்டீரியா வகைகள், பென்சிலின் எதிர்ப்பு கவசத்துடன், அடுத்த தாக்குதலுக்கு தயாராகி விட்டன.வெகு விரைவில், Methicillin-Resistant staphylococcus Aureus என்னும் புதிய வகை பாக்டீரியா மருத்துவமனைகளில் தலையைக் காட்டியது. Vancomycin என்னும் ஒரே ஒரு ஆண்டிபயாடிக்கால் மட்டுமே அதைக் கட்டுக்குள் கொண்டுவர முடிந்தது. 1997-ல், அதற்கும் பணியாத மற்றொரு வகை பாக்டீரியா, டோக்யோ மருத்துவ மனை ஒன்றில் தலையை காட்டியது. சில மாதங்களுக்குள், அதே வகை மேலும் ஆறு மருத்துவமனைகளுக்குப் பரவியது. உலகமெங்கிலும், கிருமிகள் ஜெயிக்கத் தொடங்கிவிட்டன. தற்போதய நிலவரப்படி, அமெரிக்க மருத்துவமனைகளில் மட்டுமே, ஆண்டுக்கு சுமார் 14000 மக்கள், மருத்துவமனைகளில் ஏற்படும் நோய்த்தொற்றால் மடிகிறார்கள். பன்னாட்டு மருந்துக்கம்பெனிகளின் வணிக நோக்கே, இந்த அவல நிலைக்கு காரணம் என்கிறார் James Surowiecki . பதினைந்து நாட்கள் மட்டுமே உட்கொள்ளப்படும் ஆண்டிபயாடிக் ஆராய்ச்சியிலா அல்லது ஆயுளுக்கும் மக்கள் உண்ணும் மனத்தாழ்வு போக்கி (anti-depressionist) ஆராய்ச்சியிலா பணத்தை முதலீடு செய்வது லாபமகரமானது என்று பன்னாட்டு மருந்துக் கம்பெனிகளுக்கு நன்றாகத்தெரியும். பயனில் உள்ள சில  எதிர்-உயிரிகளை வீரியப்படுத்தியது தவிர, 1970களுக்குப் பிறகு, மருந்துத் துறை எந்த புதிய  எதிர்-உயிரியையும் நமக்குத்தரவில்லை என்பதில் ஆச்சர்யம் ஒன்றுமில்லை.
இருதய நோய், ஆஸ்த்மா, ஆர்த்திரிடிஸ் (கீல்வாதம்), multiple sclerosis (தண்டுவட மரப்பு நோய்), பல வகை மூளைக்கோளாறுகள், பலவிதமான புற்று நோய்கள், (உடற்பருமனையும் சேர்த்துக்கொள்ளலாம் என்கிறது ஸயன்ஸ் பத்திரிக்கை) எல்லாவற்றிலும் பாக்டீரியாவின் பங்கு இருக்கிறது அல்லது இருக்கலாம் என்று கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. வரும் நாட்களில், எப்பாடுபட்டாவது நோயாளியின் உயிரைக் காக்க ஒரு சரியான ஆண்டிபயாடிக்கைத் தேடுகையில், அந்த மருந்து இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை என்ற வரலாற்றுத் தவறு தெரியவரும்

குடலில் உள்ள நுண்ணுயிரிகள்நண்பரா அல்லது எதிரியா ?

       .டி.எச் சூரிச்சின் ஒருங்கிணைந்த உயிரியல் நிறுவனத்தின் பேராசிரியரான நிக்கோலா ஹாரிஸ், நுண்ணுயிரிகளால் ஏற்படும் குடல் நோய்களின் பகுதியில் நிபுணர் ஆவார். ஹாரிஸ் விளக்குகிறார், “குடலுக்கும் சுற்றுச்சூழலுக்கும் இடையிலான மெல்லிய தடையின் விளைவாக, குடல் சளி தொடர்ந்து வெளிநாட்டுப் பொருட்களுக்கு வெளிப்படும், மேலும் அவை ஒரு வலுவான நோயெதிர்ப்பு சக்தியைத் தூண்டக்கூடியதாக இருக்க வேண்டும்.அதே நேரத்தில், சளிச்சுரப்பியை அங்கீகரிக்க வேண்டும் தீங்கு விளைவிக்காத ஆரம்ப கிருமிகள் சம்பந்தப்பட்டிருக்கின்றனவா, அவை மனிதர்களுடன் கூட்டுறவில் வாழ்கின்றனவா, அல்லது ஆபத்தான அல்லது ஆபத்தான நோய்க்கிருமிகளாக இருந்தாலும் சரி. ஹாரிஸ் மேலும் கூறுகிறார், “குடல் சளிச்சுரப்பியின் நோயெதிர்ப்பு அமைப்பு எனவே மிகப்பெரிய சவாலை எதிர்கொள்கிறது. செயல்படுத்தப்பட்ட பாதுகாப்பு மறுமொழியின் மூலம் அல்லது மனிதர்களும் பயனுள்ளபாக்டீரியாக்களும் கூட்டுவாழ்வில் வாழும் நிலையை பராமரிக்க வேண்டியிருக்கும் போது, நோய்க்கிருமி கிருமிகளை கட்டுக்குள் வைத்திருக்கும் ஒரு அழற்சிக்கு எதிராக அது எப்போது எதிர் தாக்குதலை மேற்கொள்ள வேண்டும் என்பதை இது தொடர்ந்து தீர்மானிக்க வேண்டும்.
பாலூட்டிகளின் பரிணாம வளர்ச்சியில் பொதுவான குடல் நுண்ணுயிரிகள் சிம்பியோடிக் பாக்டீரியா மற்றும் புழு நோய்த்தொற்றுகள் என்று அவர் கூறுகிறார். இதனால்தான் . மனிதர்களுக்கும், ஆரம்ப பாக்டீரியா மற்றும் புழு நோய்த்தொற்றுகளுக்கும் இடையிலான தொடர்புகளைப் புரிந்துகொள்ள குடலில் உள்ள நோயெதிர்ப்பு பாதுகாப்பின் பல்வேறு அம்சங்களை ஹாரிஸும் அவரது குழுவும் ஆய்வு செய்கின்றன 

நம் சுற்றுப்புறம், நாம் உண்ணும் உணவு, நமது சொந்த தூய்மைப் பழக்கவழக்கங்கள் போன்றவைதான் அடிப்படையில் நுண்ணுயிர்களுக்கும் நமக்குமான தொடர்புப் பாலங்கள். நாம் அறியாவிட்டாலும் நம் உடல் மிகவும் நுணுக்கமாக அனைத்தையும் அறிகிறது. எல்லா காரணிகளுக்கும் மத்தியில் தராசு முள் போல் ஒரு சமநிலையைப் பேணுகிறது. நாம் வலிந்தோ, மிகுந்த அஜாக்கிரதையாலோ உடலின் இயற்கையான சமநிலையை கெடுக்காமல் இருந்தாலே போதும். நுண்ணுயிர்கள் பற்றி நேரடியாகக் குறிப்பிடாவிட்டாலும் இந்திய ஆயுர்வேத, சித்த மருத்துவ முறைகளில் அறிவு/மனம்/உடல் -எவ்வாறு ஒன்றை ஒன்று நேர்மறையாகவும், எதிர்மறையாகவும் பாதிக்கின்றன என்பது குறித்து நெடுங்காலமாகவே அழுத்திச் சொல்லப்பட்டே வந்திருக்கிறது.
சொந்த சௌகரியங்களுக்காக அவற்றை பழம்புராணம் என்று அலட்சியப்படுத்தினால் நஷ்டம் நமக்குத்தான்.
.

      
ஆதாரம்:
1.      “ A Short HISTORY of Nearly Everything” by Bill Bryson, Page 22.
2.      ஆரோக்கியத்திலும் நோயிலும் குடல் நுண்ணுயிர் சமூகத்தின் பங்கு, கடலூர் வாசு ஆகஸ்ட் 15, 2017.