குடல்வாழ் நுண்ணுயிரிகள் பற்றிய சிறு அறிமுகத்தை கடந்த பகுதியில்
கண்டோம். குடல்வாழ் நுண்ணுயிரி சமூகங்கள் மனிதன் உருவான காலம் முதல் நம்முடன் வாழ்ந்து
வருகின்றன. அவற்றிற்கு இன்றியமையாதவை என்பது நாம் உண்ணும் உணவு. நம் உணவின் மூலமே அவைகள்
வளர்க்கின்றன; சில அழிக்கப்படுகிறது. அதன் நிலைதல் பாதிக்கப்படுகிறது. நாம் சுற்றுப்புறம்
அவற்றின் எண்ணிக்கை மற்றும் வளர்ச்சியில் பெரும் பங்கு வகிக்கிறது. இன்றைய ஆங்கில ஆராய்ச்சியில்
பல நோய்கள் auto immune disorder
எனும் வகையை சார்ந்தது என்று
கூறப்படுகிறது. என்னவெனில், நாம் உண்ணும் உணவில் உள்ள உணவுவேதிபொருட்களை நம் உடலின்
நோய் எதிர்ப்பு மண்டலம், உணவு என்பதை புரிந்து கொள்ள முடியாமல் எதிர்த்து போராடி அழிக்கும்
வேலையை செய்கிறது.
அல்லது நம் உடல் நோய் எதிர்ப்பு மண்டலம் நம் உடலுக்கு எதிராக வேளை
செய்ய ஆரம்பிக்கிறது. இவற்றிக்கான காரணம் என்ன என்பதை ஆராய்ந்து பார்க்கையில் நம் உடலுக்கு
பழக்கமில்லாத உணவு வேதிப்பொருட்கள் (அந்நிய உணவுகள்) உள்ள நுழையும்போது அவற்றை ஜீரணமாக்கும்
நுண்ணுயிர்கள், நம் உடலில் இருப்பதில்லை. சில சமயங்களில் இவற்றில் உள்ள மூலக்கூறுகள்
நேரடியாகவும் ரத்ததில் கலக்கிறது. இத்தகைய மூலக்கூறுகளை நோய் எதிர்ப்பு மண்டலம் உணவு
பாரம்பரியமாக வரும் உணவு அல்லாததால், இவை தேவையற்ற கழிவுகள் என்ற கணக்கில் எடுத்து
இவற்றை அகற்றுகின்றன. இதனால் நம் உடலுக்கு தேவையானது கிடைக்காததுடன், நம் நோய் எதிர்ப்பு
மண்டலமும் பலகீனமாகிறது. நம் உடலையும் அழிக்கும் விதத்தில் செயல்பட்டு நம் உடலுக்கும்
கேடு உண்டாக்குகிறது.
ஆட்டோ இம்மூன்
கோளாறு நோய்கள்
உதாரணமாக, சீமை மாட்டு
பால் அ1 பால். இந்த அ1 பாலில் உள்ள ஒரு புரதம் நம் உடலில் சுரக்கும் இன்சுலின் போன்ற
அமைப்பில் இருப்பதால், நம் நவீன எதிர்ப்பு மண்டலம் இவற்றை அழிக்க antibodies களை உற்பதி செய்கிறது. இந்த antibodies
நம் உடலில், சுரக்கும் இயற்க்கை
இன்சுலினையும் சேர்த்து தவறுதலாக அழித்து நமக்கு சர்க்கரை கோளாரை உண்டுபண்ணுகிறது.
இது போல இன்று நாம் அந்நிய கலாச்சாரத்தின் தாக்கம் மற்றும் உலகளாவிய போக்குவறது காரணமாக
ஏறப்பட்டுள்ள உணவு நகர்வு காரணமாக, நாம் நம் சூழ்நிலைக்கும், நம் பாரம்பரியதிர்க்கும்
பழக்கமில்லாத உணவுகளை உண்ணவேண்டிய கட்டாயதிற்கு தள்ளப்பட்டுள்ளோம். இவ்வகையில், நுரையீரல்
செயழிலப்பு, மூட்டு வலி, போன்று 80 வகையான auto immune கோளாறுகள் ஏற்படுவதாக இன்றைய ஆராய்ச்சிகள் தெரியப்படுத்துகிறது.
அதோடு, நாம் எடுக்கும் அந்நிய உணவுகளை முறையாக ஜீரணிக்க தேவையான
குடல்வாழ் நுண்ணுயிரிகள் நம் உடலில் இல்லை என்பதும் ஒரு காரணம் என்று அறியப்படுகிறது. Auto immune கோளாறுகளை ஏற்படுத்த வலுவான காரணியாக மாறிவிடுகிறது.
எனவே, பாரம்பரியம் அல்லாத உணவுகளை தவிர்க்க வேண்டியுள்ளது.
எது இயற்கை
உணவு?
அப்படி அவற்றை உட்கொள்ள முயலும் போது எது பாரம்பரியமானது என்பதை
அறிந்துகொள்ள வேண்டும். இன்று ஆர்கானிக் உணவுகள், இயற்கை உணவுகள் என்ற பெயரில் பல உணவுகள்,
உலா வருகின்றன. இவற்றில் பல நம் இந்தியா தேசத்திற்கு அப்பால் இருந்து வந்தவையாக இருக்கிறது
(Foreign
Origin - உதாரணம் – இங்கலீஷ் காய்கறிகள், பழங்கள்) மற்றும் சில நம் இந்தியாவிர்க்குள்ளேயே
பிரதேச மாறுபாடு, சூழல் காரணமாக பாரம்பரியமாற்றதாக
திகழ்கிறது (உதாரணம் – நாட்டு மாட்டு பால் , அரிசி, பருப்பு வகைகள் போன்றவை). இந்தியாவிர்க்குள்ளேயே, பலவகை அரிசி, பருப்பு ரகங்கள்,
நாட்டு மாடுகள் இருக்கின்றன. உள்ளூரில் வாழும் தாவரங்கள் மற்றும் அதன் உணவுகளையே உட்கொள்ள
வேண்டும். அதுவே, native அல்லது பாரம்பரியம் என்று கொள்ள முடியும்.
உள்ளூர் உணவுகள்:
உள்ளூர் காய்கறிகளுக்கு, தானிய உணவுகளுக்கு மட்டுமே நம் குடல்வாழ் நுண்ணுயிரிகள்
பழக்கப்பட்டிருக்கும். உள்ளூர் மண்ணில் வாழும் நுண்ணுயிரிகள் குடலில் பிறந்தது
முதல் நம்முடன் வளருபவை. பிறந்த மண்ணில் நம்முடலில் குடியேறும் குடல்வாழ் நுண்ணுயிரிகள்
இவை. நம் உடலின் சீரான வளர்ச்சிக்கும், இயக்கத்திற்கும் அதிமுக்கியம் என்று கடந்த
10 ஆண்டுகளில் கண்டறியப்பட்டுள்ளது. ஆகாயம்-காற்று-நெருப்பு-நீர்-பூமி இப்படி ஒன்றிலிருந்து
அடுத்தடுத்து உருவானது. பிறந்த பூமியிலிருந்து உடலிலுள்ள 5 கோசத்திற்கு – 7
தாதுக்கள் கிடைக்கிறது. பிறப்பு பந்தம், வேறு இடத்தில் இவை கிடைக்காது என்று ஆயுர்வேதம்
கூறுகிறது. ஆகவே, இது குடல்வாழ் நுண்ணுயிரிகளுக்கு பொருந்தி வருவதாக உள்ளது. ஆகவே,
இவற்றை வளர்க்கும் பாரம்பரிய உள்ளூர் (30- 40 km ) பகுதியில்
உள்ள உணவுபோருட்களே அப்பகுதியில் பிறந்தவர்களுக்கு, ஆரோக்கியமானது என்பதை கருத்தில்கொண்டு
உள்ளூர் உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும்.
இதுபற்றிய மிக்கவிரிவான விளக்கங்களை வரும் தொடர் கட்டுரைகளில் காணலாம்.
No comments:
Post a Comment